சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிய தடை – 08

சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிய தடை

SWISS

பல ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தற்போது சுவிட்சர்லாந்திலும் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து STOP EXTREMISMUS பிரச்சாரம்

சுவிட்சர்லாந்து

STOP EXTREMISMUS

“STOP EXTREMISMUS” என்கிற தலைப்பில் சுவிட்சர்லாந்து வலதுசாரி இயக்கமான சுவிஸ் மக்கள் கட்சி பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதை தடை செய்ய பிரச்சாரத்தை கடந்த ஒரு வருட காலமாக மேற்கொண்டு வந்தது.

இதைதொடர்ந்து பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற பொது ஓட்டெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 51.2% பேரும் எதிராக 48.8% பேரும் வாக்களித்தனர் அதிகம் பேர் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதை தடைசெய் வேண்டுமென வாக்களித்ததால் இது சட்டமாக அந்நாட்டில் நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுவிஸ் இஸ்லாமிக் குரூப் அமைப்பு இன்றைய நாள் முஸ்லிம்களின் கருப்பு தினமாக சுவிட்சர்லாந்து வாழ் முஸ்லிம் மக்களால் பார்க்கப்படுகிறது என தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: