[ Swamitva Scheme ] சொத்து விவரங்கள் அடங்கிய இ-அட்டை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் !! -01

[ Swamitva Scheme ]

சொத்து விவரங்கள் அடங்கிய இ-அட்டை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


சொத்து விவரங்கள் அடங்கிய இ-சொத்து அட்டை வினியோகத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Swamitva-Scheme

மத்திய அரசு ஸ்வாமித்வா என்னும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தங்கள் சொத்து பற்றிய விவரங்கள் கொண்ட இ-அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான (ஏப்ரல் 24) நேற்று அரியானா மாநிலத்தில் 1308 கிராமங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்கு இ-சொத்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி இணையம் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு சொத்து விபரம் கொண்ட இ-அட்டைகளை வழங்கினார்.

இந்த விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி covid-19 நோய்த்தொற்றை கையாள்வதில் பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். இந்தப் பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் உள்ள கிராமங்கள் தான் முதலில் வெற்றி பெறப் போகிறது என தான் நம்புவதாகவும்.

இந்திய கிராமங்களை சேர்ந்த மக்கள் நாட்டுக்கும் உலகத்திற்கும் வழிகாட்டியாக உள்ளனர் கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் முயற்சிகளிலும் கிராமங்களை கணக்கில் கொள்கிறது. நவீன இந்தியாவின் கிராமங்கள் திறமையானதாகவும் தன்னம்பிக்கை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் எனவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு 2.25 லட்சம் கோடி நிதிகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது . இந்த நிகழ்ச்சியில் அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Star Tamil News    |     Swamitva Scheme

Leave a Reply

%d bloggers like this: