[ Surya 40 ] ” சூர்யா 40 ” படத்தின் மாஸான புகைப்படம் வெளியீடு !! -06

[ Surya 40 ]

” சூர்யா 40 ” படத்தின் மாஸான புகைப்படம் வெளியீடு


இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெயர் வெளியிடப்படாத இப்படத்தை   ” சூர்யா 40 ” என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் மேலும் இப்படத்தில் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், சூரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையை இமான் இசையமைக்கிறார் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Surya-40

இந்நிலையில் இன்று படக் குழு வெளியிட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா வேஷ்டி சட்டை அணிந்து கையில் வாளுடன் இருக்கும் மாஸ் புகைப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


Star Tamil News                               Surya 40

Leave a Reply

%d bloggers like this: