[ Supreme Court ] உச்சநீதிமன்ற பணியாளர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று !! -04

[ Supreme Court ]

உச்சநீதிமன்ற பணியாளர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று


உச்சநீதிமன்றத்தின் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட  கொரோனா பரிசோதனை முடிவில் பலருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நேற்றைய தினம் இந்தியா முழுவதும் புதிதாக 169,000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் . 1,201,009 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Supreme-Court

இந்நிலையில் உச்சநீதிமன்ற பணியாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் உச்ச நீதிமன்றப் பணியாளர்கள் சுமார் 44 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 3400 பணியாளர்களை கொண்ட உச்ச நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் அறைகள், வழக்கறிஞர்களின் அறைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதால் வழக்கமாக நடைபெறும் நீதிமன்ற அலுவல் பணிகள் சுமார் ஒரு மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.


Star Tamil News                    Supreme Court 

Leave a Reply

%d bloggers like this: