[ Suez Canal ] சூயஸ் கால்வாய் – 100கிமீ நீள ட்ராபிக் ஜாம் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது நாசா!!

[ Suez Canal ]

சூயஸ் கால்வாய் – 100 கிமீ நீள ட்ராபிக் ஜாம் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது நாசா


ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எவர்கிரீன் என்கிற பிரமாண்ட சரக்கு கப்பல் கடந்த 23ஆம் தேதி மத்தியதரை கடலில் இருந்து செங்கடலுக்கு செல்லும் வழியில் சூயஸ் கால்வாயின் இடையே பலத்த காற்று காரணமாக மணலில் சிக்கிக்கொண்டது.

Suez-canal

இதன் காரணமாக சூயஸ் கால்வாய் வாயிலாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. 400 மீட்டர் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பலை கடுமையான போராட்டத்திற்கு பின் கடந்த 29ஆம் தேதி கப்பல் மிதக்கவிடப்பட்டு தற்போது போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து தடைபட்டதால் ஒரு வார காலமாக மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களின் புகைப்படங்களை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் Sumoi NPP சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் மார்ச் 29ஆம் தேதி சுமார் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு கப்பல்கள் அணிவகுத்து நிற்பதை காணலாம்.


Star Tamil News                            Suez Canal

Leave a Reply

%d bloggers like this: