[ Toll Fee ] சூயஸ் கால்வாயில் கப்பல்களின் சுங்க கட்டணம் எவ்வளவு ? சமூக வலைதளங்களில் விவாதம்!! -01

[ Toll Fee ]

சூயஸ் கால்வாயில் கப்பல்களின் சுங்க கட்டணம் எவ்வளவு ? சமூக வலைதளங்களில் விவாதம்!!


கடந்த மார்ச் 23ஆம் தேதி சூயஸ் கால்வாயில் பயணம் செய்த எவர்கிரீன் என்கிற ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் திடீரென வீசிய புயல் காற்றால் மணலில் சிக்கியது. இதனால் சுயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து ஒரு வார காலம் தடைப்பட்டது. கடும் போராட்டங்களுக்கு பின் எவர்கிரீன் கப்பல் அப்புறப்படுத்தப்பட்டு தி கிரேட் பிட்டர் ஏரியில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாயில் தற்போது கப்பல்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்கபட்டுள்ளது.

இந்நிலையில் சூயஸ் கால்வாயில் பயணம் செய்யும் கப்பல்களின் சுங்க கட்டணம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Toll-fee

சுமார் 10 ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பின் 1869 ஆம் ஆண்டு முதல் கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய் எகிப்து அரசின் அக்சய பாத்திரம் என்று கூறினால் மிகையாகாது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த கால்வாய் வெட்ட படுவதற்கு முன்பு ஆப்பிரிக்காவின் நன்நம்பிக்கை முனை வழியாகவே கப்பல்கள் போக்குவரத்து மேற்கொண்டன. பிரஞ்சு நிறுவனத்தால் வெட்டப்பட்ட இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கால்வாயில் 2.4 லட்சம் டன் எடை கொண்ட கப்பல்கள் வரை பயணம் செய்ய முடியும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 கப்பல்கள் வரை இந்த கால்வாயை கடந்து செல்கின்றன.

மத்தியதரை கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்த் அரசின் வருவாயில் முக்கிய பங்காற்றுகிறது கடந்த ஆண்டு மட்டும் 18856 கப்பல்கள் இந்த கால்வாயை கடந்து சென்றுள்ளது இதன் மூலம் ( இந்திய மதிப்பில் ) 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Toll-fee

நாளொன்றுக்கு சராசரியாக 15 மில்லியன் டாலர் வசூலாகும் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் போன்ற 2 லட்சம் டன் எடைகொண்ட பிரம்மாண்டக கப்பல் கடந்துசெல்ல சுமார் 29 லட்சம் ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது இந்த கட்டணம் கப்பல்களின் எடையை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News               Suez Canal Toll Fee

Leave a Reply

%d bloggers like this: