[ Sterlite ] 150 கோடி ரூபாய் கொரோனா நிதி அளித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம் !!

[ Sterlite ]

150 கோடி ரூபாய் கொரோனா நிதி அளித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம்


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை உட்பட பல உலக நாடுகளில் உலோக தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நேற்றைய தினம் மும்பையில் நிருபர்களிடம் சந்தித்தார்

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவலின் போது அதை எதிர்த்து போராட வேதாந்தா குழுமம் சார்பாக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது. தற்போது கொரோனா நோய் பரவல் 2-வது அலையின் தாக்கத்தையும், விலை மதிப்பற்ற உயிர்களை இழந்ததை கண்டு நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.

Sterlite

ஆகவே வேதாந்தா குழுமம் சார்பாக 150 கோடி ரூபாய் செலவில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போராட மத்திய, மாநில அரசுகளுடன் கைகோர்த்து செயல்பட உள்ளோம்.

டெல்லி, ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, கோவா போன்ற மாநிலங்களில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவை தொடங்கியிருக்கிறோம். தற்போதைய நிலையில் 700 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் 1000 படுக்கை வசதிகளாக உயர்த்தப்படும்.

மேலும் மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் எங்கள் நிறுவனம் சார்பாக வழங்கப்படும். மேலும் எங்களின் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த ஆலை மூலம் தினமும் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலும். இந்த கடினமான சூழலில் அரசு மற்றும் மக்களுடன் வேதாந்தா குழுமம் துணை நிற்கும் என அவர் கூறினார்.


Star Tamil News  |    Sterlite 

Leave a Reply

%d bloggers like this: