[ Srilankan Navy ] 86 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை கொரோனா அச்சம் காரணமாக விடுவிப்பு !!

[ Srilankan Navy ]

86 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை கொரோனா அச்சம் காரணமாக விடுவிப்பு


தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக விசை படகுகளில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராமேசுவரம் பாம்பன் மண்டபம் உட்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப் படகுகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கபடாததால் நாட்டு படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்று வருகின்றன.

Srilankan-navy

Also Read : நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் ராகுல் காந்தி கோரிக்கை

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த 3ம் தேதி மன்னார் வளைக்குடா கடல் பகுதிக்கு 11 நாட்டுப்படகுகளில் 86 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் 2 முதல் 3 நாட்கள் வரை கடலிலேயே தங்கி இருந்து மீன் பிடித்து வரக்கூடியவர்கள்.

இதன்படி நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று காலை மீன்பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 நாட்டுப்படகையும் கைப்பற்றினர் மேலும் படகில் இருந்த மீனவர்கள் 86 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அச்சமடைந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்

கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து கூறும்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பொய்யான குற்றச்சாட்டு கூறி இலங்கை கடற்படையினர் எங்களை கைது செய்தனர். இருப்பினும் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக விடுவித்தனர் என கூறினார்கள்.


Star Tamil News   |   Srilankan Navy

Leave a Reply

%d bloggers like this: