05-இலங்கையில் தொடங்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி

இலங்கையில் தொடங்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பாரதிய ஜனதா  என்கிற பெயரில் கட்சி தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகின ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் தொடங்க முடியாது என அறிவித்திருந்தது தேர்தல் ஆணையத்தின் இந்த கருத்தை எதிர்த்து முன்னாள் இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஏன் இலங்கையில் பாரதிய ஜனதா என்ற பெயரில் கட்சி தொடங்க முடியாது எனவும் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் தொடங்கப்பட்ட கட்சி அந்தப் பெயரில் பல உலக நாடுகளில் கட்சி தொடங்கப்படும் போது ஏன் இலங்கையில் பாரதிய ஜனதா என்கிற பெயரில் கட்சி தொடங்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இலங்கை

BJP

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இலங்கையை சேர்ந்த வர்த்தகர் முத்துசாமி என்பவர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது  .

இதுகுறித்து இலங்கை பாரதிய ஜனதா கட்சி தலைவர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது கட்சியின் தலைவராக நானும் பொதுச் செயலாளராக இந்திரஜித் என்பவரும் செயலாளராக திலான் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் இக்கட்சி தமிழில் இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி எனவும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சயா என்கிற பெயரிலும் அழைக்கப்படும் என தெரிவித்தார்.

 

Leave a Reply

%d bloggers like this: