[ Sri Lankan Navy ] 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

[ Sri Lankan Navy ]

39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

Star Tamil News

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது

நேற்றைய தினம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 3000 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்வளத்துறை அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 39 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மற்றும் மீனவர்களின் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் யாழ்ப்பாணம்  மற்றும் மன்னார் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Sri-lankan-navy

நேற்றைய தினம் ஐநா பாதுகாப்பு குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய நிலையில் இன்று ஒரே நாளில் 39 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் ஐநா பாதுகாப்பு குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்த மோடி அரசுக்கு கிடைத்த பரிசாக இது என விமர்சித்துள்ளார்.


Star Tamil News                    Sri Lankan Navy 

Leave a Reply

%d bloggers like this: