05-சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களுக்கு ஆப்பு – மத்திய அரசு 

சமூக வலைதளம் மற்றம் ஓடிடி தளங்களுக்கு ஆப்பு – கடுமையான கட்டுபாடுகள் விதித்தது – மத்திய அரசு  

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் கட்டுபாடுகள் ஏதுமின்றி தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப செயல்பட்டு வந்தன.

இதற்கு சரியான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள  அதிகம் வர துவங்கியது.

உதாரணமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு  சென்சார் முறை இல்லாததால் அதில் வெளியிடபடும் தொடர்களில் அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகள் சமூகத்தை சீர்கெடுக்கும் வண்ணம் இருப்பதாக ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்தன. இதற்கு ஒருபடி மேலே சென்ற சமூக வலைதளங்கள் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தன .

Central-Minister

இதற்கு முடிவு கட்ட நினைத்த மத்திய அரசு சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களுக்கு வழிகாட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது என இன்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் உண்மையான விசயங்களை எதிர்கொள்ள அரசு எப்போதும் தயார் ஆனால் போலி கணக்குகள் போலி செய்திகள் மூலம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் விசயத்தில் சமரசம் என்பதே கிடையாது  என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: