[ Snake Venom ] 1கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் 6 பேர் கைது !!!

[ Snake Venom ]

 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் 6 பேர் கைது !!!


ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள வனப்பகுதிகளில் பாம்பு விஷம் கடத்தப்படுவதாக ஒடிசா மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் நீண்ட நாட்களாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவதாகவும் இந்த கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

Snake-venom

மேலும் சில தினங்களுக்கு முன்பு கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து வனதுறை போலீசார் பாம்பு விஷம் வாங்கும் நபர்கள் போல் நாடகமாடி கடத்தல் கும்பலை சந்தித்தனர் அப்போது சாம்பிள்காக ஒரு குடுவையில் பாம்பின் விஷத்தை காட்டி அந்த கும்பல் பேரம் பேசியுள்ளது இதையடுத்து அந்த கும்பலை சுற்றி வளைத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்த போலீசார் அவர்களை புவனேஸ்வர் சிறையில் அடைத்தனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த விஷத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட நாகப்பாம்பு விஷத்தின் ஒரு லிட்டர் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனவும் ஒரு லிட்டர் விஷத்தை 200க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகளிடமிருந்து சேகரித்துருக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Star Tamil News                        Snake Venom

Leave a Reply

%d bloggers like this: