[ Sivakasi ] மீண்டும் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஒருவர் பலி!!- 04

[ Sivakasi ]

மீண்டும் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஒருவர் பலி


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி என்கிற கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றனர். அப்போது தர்மலிங்கம் என்கிற நபர் வெடிமருந்துகள் நிரம்பிய அறையை திறந்து போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் மருந்துகள் வெடித்து சிதற தொடங்கின. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த மாரனேரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Sivakasi

இப்பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் தொடர்கதையாகி உள்ளன கடந்த மாதம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுமார் 20 பேர் வரை பரிதாபமாக உடல் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் காப்பீடுகள் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Star Tamil News   |    Sivakasi firecracker factory blast

Leave a Reply

%d bloggers like this: