[ Siachen ] சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மேலும் 2 ராணுவ வீரர்கள் பலி !!

[ Siachen ]

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மேலும் 2 ராணுவ வீரர்கள் பலி


பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் மலைப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. இங்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

Siachen

காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின் சிகர பகுதியில் சராசரியாக மைனஸ் 40 டிகிரி கடும் குளிர் நிலவும் . அங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுவதும் அதில் சிக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி நடந்த பனிச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த இந்திய ராணுவம் வீரர்களை மீட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர் .

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் அமர்தீப் சிங் மற்றும் பரப்சித் சிங் ஆகிய 2 ராணுவ வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சியாச்சின் பனிச்சரிவு உயிரிழப்புகள்

சியாச்சின் சிகரத்தில் கடந்த 2012 ஏப்ரல் 7ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 140 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய வீரர்களும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்களும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News    |     Siachen 

Leave a Reply

%d bloggers like this: