[ Shiv Sena MLA ] என் கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போட்டு விடுவேன் சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து !!-02

[ Shiv Sena MLA ]

என் கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போட்டு விடுவேன் சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து


இந்தியாவில் covid-19 நோய் தொற்றின் இரண்டாவது அலை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நேற்றைய தினம் 68500 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அதை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது மகாராஷ்டிரா அரசு.

Shiv-sena-mla

இந்நிலையில் ஆளும் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து தெரிவித்துள்ள கருத்து அம்மாநில அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிவசேனா எம்எல்ஏ கருத்து தெரிவிக்கையில் பெரும் நோய் தொற்று பரவி வரும் இந்த நிலையில் மோடி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு அரசியல் செய்யும் நேரமா இது? ஆளும் சிவசேனா அரசு covid-19 நோய் தொற்றை தடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு வரும் இந்த வேளையில் அரசு இதில் தோல்வியடைந்ததாக கட்ட முயற்சிக்கின்றனர்.

மேலும் அரசுக்கு உதவியாக இருப்பதை விட்டுவிட்டு எங்கள் முயற்சிகளை கெடுக்கும் வேலைகளை எதிர்கட்சிகள் செய்து வருகின்றது. கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை உருவாக மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தான் காரணம். ஒருவேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போட்டு விடுவேன் அந்த அளவுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 


Star Tamil News | Shiv Sena Mla 

Leave a Reply

%d bloggers like this: