01-ஒளிரும் தன்மையுடைய சுறா மீன் கண்டுபிடிப்பு !!!!

ஒளிரும் தன்மையுடைய சுறா மீன் !!!!

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளிரும் தன்மையுடைய சுறா மீனை கண்டறிந்துள்ளனர் .

சுறா-மீன்

இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த வகை சுறா மீன்கள் கடலில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில்  வாழ கூடியது இவ்வளவு ஆழமான கடல் பகுதியில் சூரிய வெளிச்சம் என்பது அறவே இருக்காது.  இந்த வகை சுறா மீன்களை  அடிபகுதியில் இருந்து காணும் போது அதன் ஒளிரும் தன்மை புலப்படுகிறது அதன் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் விளைவாக இது ஏற்படுகிறது இதன் ஒளிரும் தன்மையை பயன்படுத்தி இந்த வகை சுறா மீன்கள் தனது உணவு தேவைகான வேட்டையில் ஈடுபடுகிறது.

இந்த ஒளிரும் சுறா மீன்களை போல மேலும் வேறு ஏதாவது உயிரினங்கள் உள்ளானவா என ஆராய்ந்து வருவதாக நியூசிலாந்து தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: