[ Shakthimaan ] வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் முகேஷ் கண்ணா !! -01

[ Shakthimaan ]

வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் முகேஷ் கண்ணா


90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் ஹீரோவான ( சக்திமான் ) முகேஷ் கண்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

90களில் மகாபாரதம் சக்திமான் உள்ளிட்ட தொடர்களின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகர் முகேஷ் கண்ணா. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த சூப்பர்ஹீரோவான சக்திமான் அந்த தொடரை தானே இயக்கியும் நடித்தும் இருந்தார். இந்த தொடர் இவருக்கு மொழிகளை கடந்து நாடு முழுவதும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.

இந்நிலையில் 62 வயதான ( சக்திமான் ) முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் எனவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ தொடங்கின. இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகேஷ் கண்ணா வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Shakthimaan

Also Read : முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் !!

அதில் தான் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லவே இங்கு வந்தேன். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னார்கள். அதை செய்ய விரும்புகிறேன். நான் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கிறேன். எனக்கு எப்போதும் உங்கள் ஆசீர்வாதங்கள் இருக்கின்றன.

என் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி. உடல்நலம் குறித்து விசாரிக்க பலர் என்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதனால்தான் நான் நலமாக இருப்பதை என் ரசிகர்களிடம் தெரிவிப்பதற்காக இந்த காணொளியை வெளியிடுகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களுடன் நான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.

எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Also Read : ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !!


Star Tamil News  |  ShakthiMaan

Leave a Reply

%d bloggers like this: