[ Sexual harassment ] கொரோனா பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறல் !! -01

[ Sexual harassment ]

கொரோனா பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறல் !!


மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் சுபம், ஹிருதேஷ் என்கிற 2 ஊழியர்களை இந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள எம்.ஒய் மருத்துவமனையின் ஊழியர்கள் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

Sexual-harassment-star-tamil-news

Also Read : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி !!

இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் இந்தூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதை அறிந்து கொண்ட குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். தலைமறைவான இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் எனவும் இந்த சம்பவம் மே 5 தேதி இரவில் நடந்ததுள்ளது எனவும் இந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ்பக்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் இரண்டு பேரும் ஒப்பந்தம் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் எனவும் இவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளனவா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி !!


Star Tamil News  | Sexual Harassment

Leave a Reply

%d bloggers like this: