[ Sagayam IAS ] கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சகாயம் ஐ.ஏ.எஸ் !! -01

[ Sagayam IAS ]

கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சகாயம் ஐ.ஏ.எஸ்


நேர்மையான அதிகாரியாக தமிழக மக்களின் அன்பை பெற்ற திரு.சகாயம் ஐஏஎஸ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ” சகாயம் அரசியல் பேரவை ” என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி சார்பாக நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களுக்கு ஆதரவாக தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Sagayam-Ias

இந்நிலையில் காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார் சகாயம் ஐ.ஏ.எஸ் . பரிசோதனை முடிவில் அவருக்கு  கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Star Tamil News                         Sagayam IAS

Leave a Reply

%d bloggers like this: