இனி ஆர்.டி.ஓ ஆபீஸ் செல்ல தேவையில்லை – 18 விதமான சேவையை ஆன்லைனில் பெறலாம்!!

இனி ஆர்.டி.ஓ ஆபீஸ் செல்ல தேவையில்லை – 18 விதமான சேவையை ஆன்லைனில் பெறலாம்.

ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் பழகுநர் உரிமம் பெறுதல் போன்ற 18 விதமான சேவைகளுக்கு இனி ஆர்டிஓ ஆபீஸ் செல்ல தேவையில்லை எனவும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Morth India அறிவிப்பு
ஆர்.டி.ஓ

Morth

மத்திய மாநில அரசுகள் அரசுத்துறைகளில் பொதுமக்கள் எளிதாக சேவையை பெற ஆன்லைன் முறையை ஏற்படுத்த தீவிரம் காட்டி வருகிறது அதன் ஒரு கட்டமாக தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கீழ்காணும் இந்த 18 வகையான சேவைகளுக்கு ஆர்டிஓ ஆபீஸை பொதுமக்கள் நேரடியாக அணுகத் தேவையில்லை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

 1. பழகுநர் உரிமம்
 2. ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு
 3. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்
 4. ஆர்சி புக் பெயர் மாற்றம்
 5. இன்டர்நேஷனல் லைசென்ஸ் அனுமதி
 6. வாகன உரிமத்தை ஒப்படைத்தல்
 7. தற்காலிக பதிவு விண்ணப்பம்
 8. வாகன பதிவு எண் பெறுதல்
 9. வாகன டூப்ளிகேட் நம்பர் பெறுதல்
 10. என்ஓசி சான்றிதழ் பெற
 11. வாகன உரிமையாளர் மாற்றம் விண்ணப்பித்தல்
 12. ஆர்சி புக் முகவரி மாற்றம்
 13. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பித்தல்
 14. உயர் அதிகாரிகளின் வாகனத்தை பதிவு செய்ய விண்ணப்பித்தல்
 15. வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தம்
 16. வாகன வாடகை ஒப்பந்தம் ரத்து செய்தால்
 17. வாகன உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்
 18. தூதரக அதிகாரியின்  வாகனங்களுக்கு  வாகன பதிவு எண் பெற

இந்த 18 சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

Leave a Reply

%d bloggers like this: