[ Rss Chief ]  ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி !! -03

[ Rss Chief ]

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா நோய் தொற்று நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும் தொற்று பரவல் வேகம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.

பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த மாதம் மார்ச் 7ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RSS-Chief

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செய்தியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவதிற்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Star Tamil News                              RSS Chief

Leave a Reply

%d bloggers like this: