[ Rocketry ] மாதவனின் ” ராக்கெட்ரி ” படத்தின் மாஸ் டிரைலர் வெளியீடு !! -01

[ Rocketry ]

மாதவனின் ” ராக்கெட்ரி ” படத்தின் மாஸ் டிரைலர் வெளியீடு


ஐயா அப்துல் கலாமிற்கு பின் இந்தியாவிற்கு கிடைத்திருக்க வேண்டிய மாபெரும் பொக்கிஷமான இஸ்ரோ விஞ்ஞானி திரு.நம்பி நாராயணன் அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கப்பட்டார். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ராக்கெட்ரி இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிப்பதோடு அவரே இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rocketry

1994 ஆம் ஆண்டு மாலத்தீவை சேர்ந்த இரண்டு பெண்களிடம் ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கூறி கைது செய்யப்பட்ட திரு நம்பி நாராயணன் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அவ்வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் இவரின் கைது காரணமாக இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பின் தங்கியது என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடிப்படையாக வைத்து நம்பி நாராயணன் ஒப்புதலோடு திரைக்கதையை எழுதியிருக்கிறார் மாதவன்.

Rocketry

இப்படத்தில் நம்பி நாராயணன் மனைவி மீனா நம்பி வேடத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சூர்யா,  ஷாருக்கான் போன்றோரும் நடித்துள்ளனர். படத்தின் இசையை விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது ராக்கெட்ரி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது டிரைலரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தில் தானும் நடித்துள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் ராக்கெட்ரி திரைப்படம் தமிழ் , ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News                     Rocketry Movie

Leave a Reply

%d bloggers like this: