[ Rocket Launcher ] மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் !! -01

[ Rocket Launcher ]

மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்


வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது அவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை கடலோர காவல்படை போலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் என்னும் மீனவ கிராமத்தை சேர்ந்த சபரி என்கிற நபருக்கு சொந்தமான பைபர் மீன்பிடி படகில் அதே பகுதியை சார்ந்த 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு தென் கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் கடல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் உருளை வடிவிலான இரும்பு மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.

Rocket-Launcher

Also Read : ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது !!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருளோடு அவசரமாக கரைக்கு திரும்பி கிராம மக்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம பஞ்சாயத்தார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கீழையூர் கடலோர காவல்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வலையில் சிக்கிய அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தபோது அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றிய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது !!


Star Tamil News   |    Rocket Launcher

Leave a Reply

%d bloggers like this: