புதுவை | ரங்கசாமிக்கும் திமுக அழைப்பு!! காங் கழட்டி விடபடுகிறதா ? – 01

புதுவை ரங்கசாமிக்கும் திமுக அழைப்பு!! காங் கழட்டி விடபடுகிறதா ?
Puducherry

என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அதிமுக கூட்டணியின் இன்னமும் முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில் புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க வரவேண்டுமென புதுவை மாநில திமுக அமைப்புச் செயலாளர் நஜீம் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா புதுவையில் பாஜக தலைமையிலான ஆட்சி விரைவில் அமையும் என தெரிவித்தது அம்மாநில அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அதிர்ச்சியடைந்த புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி கூட்டணியை விட்டு விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின இந்நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமாரை முன்னாள் முதல்வர் ரங்கசாமி சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என் ஆர் காங்கிரஸ் 14 தொகுதியிலும் பாஜக 10 அதிமுக ஐந்து என்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

 திமுக அமைப்புச் செயலாளர் பேச்சு
திமுக

Karaikal nazim

இந்த சூழ்நிலையில் தற்போது திமுகவின் புதுவை அமைப்பு செயலாளர் காரைக்கால் நஜீம் திமுக கூட்டணிக்கு தலைமை ஏற்க முன்னாள் முதல்வர் ரங்கசாமி வரவேண்டும் என திமுக தலைவர்     மு.க.ஸ்டாலின் விரும்புவதாக தெரிவித்த கருத்து அம்மாநில அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தமிழ்நாட்டில் சீட் பேரத்தில் முரண்டு பிடிக்கும் காங்கிரசை வழிக்கு கொண்டு வரும் முயற்சியாக இது இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: