[ Remdesivir ] ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்ற 4 பேர் கைது !!

[ Remdesivir ]

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்ற 4 பேர் கைது


கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை மேற்கொள்ள படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரித்தல், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில உங்கள் எடுத்து வருகின்றன.

Remdesivir

Remdesivir

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகள் மருந்தகங்கள் மற்றும் மருந்து வர்த்தகர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும். அதை மீறி மருந்துகளை பதுக்கும் செயலில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக அளவில் வாங்கி அதை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து கோடம்பாக்கத்தை சேர்ந்த சாம்பசிவம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமு ஆகிய இருவரை வேப்பேரி போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், எர்ணாவூரைச் சேர்ந்த ஜாஸ்பர் ஜானோ ஆகிய இருவரை ஐசிஎப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களுக்கு முக்கிய மருந்தான ரெம்டெசிவிர் மருந்தை 15 ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த ரெம்டெசிவிர் மருந்தை வாங்க 10 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பல நபர்கள் முதல் நாள் இரவிலிருந்தே விடிய விடிய காத்திருந்து மருந்தை வாங்குகின்றனர். 5வது நாளாக நேற்றும் சென்னை மட்டுமின்றி மதுரை திருச்சி வேலூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க அதிகமானோர் வந்திருந்தனர்.


Star Tamil News  |  Remdesivir

Leave a Reply

%d bloggers like this: