[ Rahul Gandhi ] பிரதமர் மோடியை சதாம் உசேன் கடாபி போன்றவர்களுடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி !!-01

             [ Rahul Gandhi ]

பிரதமர் மோடியை சதாம் உசேன் கடாபி போன்றவர்களுடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீப காலங்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடி வருகிறார் அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவின் புகழ் பெற்ற பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்  இணையதளம் மூலம் கலந்து கொண்டார் கலந்துரையாடல் நிகழ்வின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி 1989 முதல் எங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் இந்திய பிரதமர் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர்களை உருவாக்கி அவர்களை வெற்றி பெற செய்ய இயன்றவரை முயன்று வருகிறேன் வேறு எந்த கட்சியிலும் இல்லாத அளவு காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக முறை கடைபிடிக்கப்படுகிறது.

Rahul-Gandhi

சதாம் உசேன் முகமது கடாபி போன்றவர்கள் ஆட்சிக்காலத்திலும் அங்கு தேர்தல்கள் நடைபெற்றன அவர்கள் வெற்றியும் பெற்றனர் அதற்காக அவர்களுக்கு எதிராக யாரும் அங்கு ஓட்டு செலுத்தவில்லை என்று அர்த்தமில்லை அங்கு ஜனநாயக ரீதியாக மக்களின் எதிர்ப்பு ஓட்டுக்களை பாதுகாக்கும் அமைப்பு முறை இல்லை என்பதே உண்மை அதே போல இந்தியாவிலும் நடைபெறுவதாக மறைமுகமாக விமர்சித்தார் .

மேலும் அவர் குறிப்பிடுகையில் வாக்குரிமை என்பது வெறும் பட்டனை அழுத்துகையில் மட்டும் முடிந்து விடுவது இல்லை ஒரு நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் நாடு எவ்வாறு செயல்படுகிறது போன்ற விஷயங்கள் சார்ந்தது இவைகளுக்கு எதிராக செயல்படும் பாரதிய ஜனதா மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி பிரதமர் மோடி பெயரை குறிப்பிடாமல் சதாம் உசேன் கடாபி போன்றவர்களுடன் ஒப்பிட்டு நீதித்துறை மற்றும் தேர்தல் முறை போன்றவை இந்தியாவில் கட்டுப்படுத்துவதாக விமர்சித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rahul Gandhi.      Star Tamil news

Rahul Gandhi                            Star tamil news

Leave a Reply

%d bloggers like this: