[ Rahul Gandhi ] சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – ராகுல் காந்தி கண்டனம் !! – 01

[ Rahul Gandhi ]

சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – ராகுல் காந்தி கண்டனம்


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஐந்து இடங்களில் நேற்றைய தினம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரவு 8 மணி அளவில் முடிவுற்றது 12 மணி நேர தொடர் சோதனையில் பணமோ ஆவணமும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

வீட்டுச் செலவுக்காக 1.30 இலட்சம் ரூபாய் வைத்திருந்ததாகவும் அதற்கும் முறையான ஆவணங்கள் காட்டியதால் அந்த பணத்தையும் அதிகாரிகள் திருப்பி ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rahul-gandhi

இந்த ரெய்டு குறித்து பல தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வெளியிட்ட அறிவிப்பில் வருமான வரித்துறை சோதனையின் மூலம் மோடி எங்களை குற்றமற்றவர் என நிரூபித்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து காங் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் மூலம் வருமானவரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில் பாரதிய ஜனதா கட்சி எப்போதெல்லாம் தோல்வியை எதிர் கொள்கின்றதோ அப்போதெல்லாம் வருமானவரித்துறை ரெய்டு என்கிற வழிமுறையை தவறாமல் கடைப்பிடிக்கும் என பதிவிட்டிருக்கிறார்.


Star Tamil News                          Rahul Gandhi

Leave a Reply

%d bloggers like this: