05-இந்திரா காந்தி செய்தது மிக பெரிய தவறு – ராகுல் கருத்து !!!

இந்திரா காந்தி செய்தது மிக பெரிய தவறு – ராகுல் கருத்து !!!

5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மூன்று நாட்களாக மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இதற்கிடையே அமெரிக்க பல்கலைக்கழகம்  ஏற்பாடு செய்திருந்த இணைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் போது பொருளாதார நிபுணர் கெளஷிக் பாசு ராகுல் காந்தியிடம் 1975 முதல் 1977 வரை எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது பற்றி உங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பினார்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல்காந்தி ஆம் தனது பாட்டியும் முன்னாள் இந்திய பிரதமருமான இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியது மிகப்பெரிய தவறுதான் எனவும் ஆனால் தற்போது உள்ள இந்தியா முற்றிலும் மாறுபட்டுள்ளது இங்கு   ஆர்.எஸ்.எஸ் எல்லா ஜனநாயக அமைப்புகளிலும்  ஊடுருவி ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறது ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்தும் வேலையை செய்ததில்லை செய்ய நினைத்ததும் இல்லை  எங்கள் கட்டமைப்பு அதற்கு அனுமதி அளிக்காது எங்களுக்கு அந்த வலிமை இல்லை என ராகுல் பதில் அளித்தார்.

Leave a Reply

%d bloggers like this: