[ Rafale ] பிரான்ஸில் இருந்து புறப்பட்டது 3 ரபேல் போர் விமானங்கள் – இன்று இந்தியா வருகை !!

[ Rafale ]

பிரான்ஸில் இருந்து புறப்பட்டது 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை


பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வரவுள்ளது இடையில் எங்கும் நிற்காமல் பயணம் மேற்கொள்ளும் 3 ரபேல் போர் விமானங்களும் இன்று மாலை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப் படையை வலிமைப்படுத்தும் நோக்குடன் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவன தயாரிப்பான ரபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

Rafale

இதையடுத்து முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் சென்ற ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. இந்தியா-சீனா இடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வந்த வேலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி 3 ரபேல் விமானங்களும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விமானங்களும் அடுத்தடுத்து இந்தியாவை வந்தடைந்தன.

Rafale

தற்போது 4வது கட்டமாக மேலும் 3 ரபேல் விமானங்கள் பிரான்சின் மெரினாக் விமான படைத்தளத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இந்த விமானங்கள் இடையில் எங்கும் தரை இறங்காது எனவும் சவுதி அரேபிய வான்வெளிப் பகுதியில் அந்நாட்டு விமானப் படையின் உதவியுடன் நடுவானில் இந்த போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த 3 ரபேல் போர் விமானங்களும் இன்று மாலை 7 மணிக்கு குஜராத் மாநிலம் அம்பாலா விமானப்படை விமான தளத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Star Tamil News                               Rafale

Leave a Reply

%d bloggers like this: