PSBB : ராஜகோபாலனிடம் விடிய விடிய நடைபெற்ற ஸ்பெஷல் விசாரணை – பரபரப்பு வாக்குமூலம் !! – 01

PSBB : ராஜகோபாலனிடம் விடிய விடிய நடைபெற்ற ஸ்பெஷல் விசாரணை – பரபரப்பு வாக்குமூலம்


பள்ளி மாணவிகளிடம் ஆன்லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் நேற்றைய தினம் கைதான சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி கைதான ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Psbb

Also Read : ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை – பாரத் பயோடெக் !!

 

கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியில் காமர்ஸ் ஆசிரியர் ஆக பணியாற்றி வரும் ராஜகோபாலன் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பலரும் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று இரவு ராஜகோபாலனிடம் போலீசார் நடத்திய ( சிறப்பு கவனிப்பு ) விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11&12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பள்ளியில் வேலை பார்க்கும் சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக ராஜகோபாலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தனது பாலியல் அத்துமீறல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் தனது செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை ராஜகோபாலன் அழித்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .

பள்ளியில் தன்னை போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து PSBB பள்ளியில் ராஜகோபாலன் போலவே மேலும் பல ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Also Read : மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி !!


Star Tamil News  |  PSBB

Leave a Reply

%d bloggers like this: