[ Proning ] உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வழிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை !! -03

[ Proning ]

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வழிமுறைகள் மத்திய சுகாதாரத்துறை

STAY HOME STAY SAFE


இந்தியாவில் covid-19 நோய் தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவு அதிதீவிரமாக பரவி வருகிறது நேற்றைய தினம் மட்டும் சுமார் 3.6 லட்சம் பேர் புதிதாக இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் தீவிர நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனா தொற்று நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் அவ்வப்போது தங்கள் உடல் நிலையை பரிசோதித்து கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா நோயாளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் உடலின் வெப்பநிலை, உடலில் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை பரிசோதித்து கொள்வது அவசியம். மேலும் திடீரென மூச்சு திணறலோ அல்லது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலும் பதற்றமடைய தேவையில்லை.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி குப்புறப்படுத்து உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம்.

சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை கீழே உள்ள படத்தில் காண்க.

Proning

Proning

Proning

Proning


Star Tamil News  |  Proning  | ஆக்சிஜன்

Leave a Reply

%d bloggers like this: