[ Magufuli ] தான்சானியா நாட்டு அதிபர் மாகுபலி உயிரிழந்தார் !!-01

 [ Magufuli ] தான்சானியா நாட்டு அதிபர் மாகுபலி உயிரிழந்தார்


ஆப்பிரிக்கா கண்டத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு தான்சானியா அந்நாட்டின் அதிபர் மாகுபலி உடல் நலக்குறைவு காரணமாக தனது 61வது வயதில் உயிரிழந்தார்.

1995 முதல் தான்சானியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் மாகுபலி  போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மீன்வளம் போன்ற துறைகளின் அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 தேர்தலில் வெற்றி  பெற்று அதிபர் பதவி ஏற்ற மாகுபலி கடந்த ஒரு வார காலமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார் இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு என செய்திகள் பரவிய நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

Magufuli

 

இது தொடர்பாக அந்நாட்டு செய்தி துறை வெளியிட்ட அறிக்கையில் அதிபர் மாகுபலிக்கு கொரானா பாதிப்பு இல்லை எனவும் இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல நாட்டு தலைவர்களும் தான்சானியா நாட்டு அதிபர் மாகுபலி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Star Tamil News                                 Magufuli

Leave a Reply

%d bloggers like this: