[ Prashant Kishor ] மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ !! -06

[ Prashant Kishor ]

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ


மேற்கு வங்க தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியே வெற்றி பெறும் என பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது இதுவரை மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் உரையாடும் ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Prashant-Kishor

பிரசாந்த் கிஷோர் பேசும் அந்த ஆடியோவில் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாகவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் மேலும் மம்தா பேனர்ஜி சிறுபான்மையினர் வாக்குகளை கவருவதையே முக்கியமாக கருதுவதால் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் ட்விட்டர் மூலம் வெளியிட்ட அறிவிப்பில் தனது பேச்சில் பாதியை மட்டும் வெட்டி பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். தைரியம் இருந்தால் முழு ஆடியோவை அவர்கள் வெளியிட வேண்டும். மேற்கு வங்க தேர்தலில் உறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


Star Tamil News                                Prashant Kishor 

Leave a Reply

%d bloggers like this: