[ Prabhu Deva ] பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்  வீடியோ வைரல் !! -01

[ Prabhu Deva ] பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்  வீடியோ வைரல்

தமிழகம் புதுவை  உட்பட  5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம்,  வாக்கு செலுத்த பணம் வாங்க கூடாது,  வாக்காளர்களின் உரிமை போன்றவற்றை முன்னிறுத்தி கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரம் வினியோகம் மற்றும் பிரபலங்களை விளம்பர தூதுவராக நியமிப்பது போன்ற பல்வேறு வழிகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை  தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Prabhu-deva

Prabhu Deva

அதன்படி  தமிழக வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடிகர் பிரபுதேவாவை விளம்பர தூதராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது மேலும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பிரபுதேவா பாடும் பாடலின் வீடியோ ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் இவர் தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: