[ MNM ] தேர்தல் தோல்விக்கு காரணம் ? மநீம கூட்டத்தில் காரசார விவாதம் !! -01

[ MNM ]

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன ? மநீம கூட்டத்தில் காரசார விவாதம்


தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 2ஆம் தேதி வெளியாகின . இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதன்முறையாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வந்த நிலையில் கடைசி சில சுற்றுகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். 1400 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தது அக்கட்சித் தொண்டர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது .

இந்நிலையில் மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mnm-கமல்ஹாசன்

Also Readடெபாசிட் இழந்த பிரேமலதா – விரக்தியின் உச்சத்தில் தேமுதிக தொண்டர்கள்

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மநீம கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தான் தோல்விக்கு காரணம் எனவும் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்களும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என தெரிவித்தார்.


Star Tamil News  | MNM

Leave a Reply

%d bloggers like this: