[ Pondicherry ] புதுவை  பாஜக + என்.ஆர்.காங் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு – கருத்துகனிப்பு முடிவுகள் !!- 01

[ Pondicherry ]

புதுவை  பாஜக + என்.ஆர்.காங் கூட்டணிக்கு வெற்றி – கணிப்பு முடிவுகள்

தமிழகம் புதுவை உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்களின் மன ஓட்டங்களை அறிய நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகி வருகிறது.

அதன்படி வெளியாகியுள்ள  பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் மேற்கு வங்கத்தில் -திரிணாமுல் காங்கிரஸ், அசாம்- பாரதிய ஜனதா, கேரளா – ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகம் – திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.

Pondicherry

Pondicherry N.RengaSamy

இதைதொடர்ந்து ஏசியாநெட் சி-போர்ஸ் இணைந்து நடத்திய புதுச்சேரி மாநில தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன அதில் என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி 52% வாக்குகள் பெற்று 23 முதல் 27 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு 37% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனவும்  காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 3 முதல் 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: