[ Lockdown ] சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி – நாடு முழுவதும் ஊரடங்கு – பிரதமர் இன்று அவசர ஆலோசனை !! -01

[ Lockdown ]

சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி – நாடு முழுவதும் ஊரடங்கு – பிரதமர் இன்று அவசர ஆலோசனை


இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகிறது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதையடுத்து நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வெளியிட்ட அறிவிப்பில் covid-19 நோய் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? ஆக்சிஜன் வினியோகம் மற்றும் மருந்துகள் அரசிடம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதா ? தடுப்பூசி செலுத்தும் பணி எந்த அளவில் உள்ளது . நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த அவசர நிலை குறித்த அரசின் திட்டங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் என தெரிவித்திருந்தார்.

Lockdown

இதை தொடர்ந்தது கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவல் குறித்து இன்று பிரதமர் மோடி அரசின் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை முடிவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் முதல்வர்களுடன் அம்மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை தடுப்பூசி செலுத்தும் பணிகள் போன்றவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Star Tamil News     |      Lockdown

Leave a Reply

%d bloggers like this: