07-பிரசாந்த் கிஷோரின் அடுத்த அசைன்மென்ட் பஞ்சாப் !!

பிரசாந்த் கிஷோரின் அடுத்த அசைன்மென்ட் பஞ்சாப் .

பிரபல அரசியல் வியூகம் வகுப்பார்கள் பிரசாந்த் கிஷோர் தனது முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

பஞ்சாப்

குஜராத்தில் மோடியின் அரசியல் வியூகம் மற்றும் பிரச்சார யுக்திகளை வகுப்பதற்காக 2011ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார் அவரின் வியூக உத்திகளால் கவரப்பட்ட மோடி 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைத்தார் அதற்கு கைமேல் பலனாக பிஜேபி தனி பெரும்பான்மை இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியமைத்தது.

இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் ஐ பேக் எனும் நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்கள் பிரச்சார யுக்திகள் தொகுதியில் செல்வாக்கு பெற்ற  வேட்பாளரை அடையாளம் காண்பது மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை செய்து வந்தார்.

பீகாரில் நிதிஷ் குமார் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு கடந்த காலங்களில் முதன்மை ஆலோசகராக செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது  பி கே வின்  ஐ பேக் நிறுவனம்.

தற்போது மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் அதேபோல தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராகவும் தேர்தல் வியூகம் வகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்

பஞ்சாப் முதல்வரின் அறிவிப்பு

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் பிரசாந்த் கிஷோரை தனது முதன்மை ஆலோசகராக நியமித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

%d bloggers like this: