[ Petr Kellner ] செக் குடியரசு நாட்டின் மிகப்பெரிய  கோடீஸ்வரர் – அமெரிக்கா ஹெலிகாப்டர் விபத்தில் பலி !! -07

[ Petr Kellner ]

செக் குடியரசு நாட்டின் மிகப்பெரிய  கோடீஸ்வரர் – அமெரிக்கா ஹெலிகாப்டர் விபத்தில் பலி


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று செக் குடியரசு நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் பீட்டர் ஹெல்னர் உட்பட 6 பேர் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பனி சூழ்ந்த ஆன்கரேஜ் பகுதியே சுற்றிப்பார்க்க தனியார் வாடகை ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகாப்டரின் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்த அலாஸ்கா மாநில அதிகாரிகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் நிக்கிளேசியர் என்கிற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது என தகவலறிந்து மீட்புகுழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Petr-Kellner

விமானி உட்பட மொத்தம் ஆறு பேர் பயணம் செய்த இந்த ஹெலிகாப்டரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பலியாகியுள்ளார் பீட்டர் ஹெல்னர் என்பவர் செக் குடியரசு நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர் ஆவார். பிரபல நாளிதழ் போர்ப்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவு சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் 88வது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஹெல்னர் மரணம் செக் குடியரசு நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News                           Petr Kellner

Leave a Reply

%d bloggers like this: