[ Drone ] இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் !! -01

[ Drone ]

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்


பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து போட்டு சென்ற ஆயுதங்களை இந்திய பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த சிறிய ரக ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள் வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுகின்றது.

Drone

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!

இந்நிலையில் தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பிஎஸ்எப் எனப்படும் பார்டர் செக்யூரிட்டி போர்ஸின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் அருகே உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்து பணியின்போது. மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதன் அருகே ட்ரோன்களில் எடைகளை தாங்குவதற்காக பொருத்தப்படும் மரச்சட்டமும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் ட்ரோன்கள் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய இந்த ஆயுதங்கள் அந்த பகுதியில் போடப்பட்டிருப்பது உறுதியாகிறது.

Also Read : இந்தியாவின் நிலையை கண்டு பரிதாபப்படும் உலக சுகாதார அமைப்பு !!


Star Tamil News  |  Drone 

Leave a Reply

%d bloggers like this: