[ Red List ] கொரோனா பரவல் – பாகிஸ்தானை சிவப்புப் பட்டியலில் சேர்த்தது இங்கிலாந்து!!-06

[ Red List ]

கொரோனா பரவல் – பாகிஸ்தானை சிவப்புப் பட்டியலில் சேர்த்தது இங்கிலாந்து.


உலகம் முழுவதும் covid-19 நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளன அந்த வகையில் சுமார் 40 நாடுகளை இதுவரை சிவப்புப் பட்டியலில் சேர்த்து அந்த நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான்,கென்யா பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை தற்போது இந்த சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது இதனால் இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருகை புரிய தடை விதிக்கப்படுகிறது இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Red-list

மேலும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஸ்காட்லாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதன்படி இவர்கள் இங்கிலாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Star Tamil News                                 Red List 

Leave a Reply

%d bloggers like this: