[ Oxygen Shortage ] ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் 12 பேர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் தலைநகரம் !!

[ Oxygen Shortage ]

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் 12 பேர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் தலைநகரம்


இந்தியா தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பல மருத்துவனைகள் அவசர அழைப்பு விடுத்து வருகிறது என ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Oxygen-Shortage

மேலும் நாள் ஒன்றுக்கு 976 டன் ஆக்சிஜன் தேவை என மத்திய அரசிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம் அதேபோல் நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வெறும் 312 டன் ஆக்சிஜனே கிடைத்தது என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் தேவை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

டெல்லி மருத்துவமனைகளில் மிக மோசமான அளவு ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி பாட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இன்று மாலை வரை டாக்டர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் சுதான்சு பங்கத் தெரிவிக்கையில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை மிக மிக ஆபத்தான கட்டம் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.

 


Star Tamil News | Oxygen Shortage

Leave a Reply

%d bloggers like this: