08-பட்டத்துடன் தமிழகம் பறந்து  வருகிறார் ஓவைசி

பட்டத்துடன் தமிழகம் பறந்து  வருகிறார் ஓவைசி

ஹைதராபாத்தின் எம்.பியும் AIMIM கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி சமீப காலங்களில் நாடு முழுவதும் உற்றுநோக்கும் அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ளார் இதற்கு முக்கிய காரணமாக கடந்த பீகார் சட்ட மன்ற தேர்தல் கருதப்படுகிறது அத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியுற்றது இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றார் பல தொகுதிகளில் தோல்வியுற்றாலும் இவரின் கட்சி பிரித்த வாக்குகள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வெற்றியை சூறையாடியது.

இதனால் பாஜகவின் பி டீம் என கடுமையாக விமர்சனங்கள் எழுந்தாலும் விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.

ஓவைசியின் லட்சியம்
தமிழகம்

Owaisi

ஆர்எஸ்எஸ் அமைப்பைப் போல நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஒரு குடையின் கீழ் இணைத்தால் மட்டுமே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கான உரிய அங்கீகாரத்தை பெற முடியும். எத்தனை காலம் தான் காங்கிரஸ் கட்சியை நம்பி ஏமாறுவது என  கருதும் ஒவைசி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுகவைவிட பாஜகவை அதிகம் விமர்சித்து வருகிறார் .

தமிழக சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு

சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஓவைசி கட்சி போட்டியிடும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது அதைத்தொடர்ந்து திமுக ஓவைசியுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது எனவும் தமிழக சிறுபான்மை கட்சிகளின் எதிர்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் கசிந்தன.

பட்டம் பறக்குமா

இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள ஓவைசியின் AIMIM கட்சிக்கு தேர்தல் ஆணையம் பட்டம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது . AIMIM கட்சிக்கு வாணியம்பாடி , ஆம்பூர் , சேப்பாக்கம் போன்ற சில தொகுதிகளில் உள்ள உருது பேசும் மக்களிடம் செல்வாக்கு உள்ளதால் ஓவைசியின் வருகை தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

 

Leave a Reply

%d bloggers like this: