[ OPS ] ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் காலமானார் !! -01

[ OPS ]

ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் காலமானார்


அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் இன்று காலமானார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாலமுருகன் , ராஜா, சுந்தர் என மூன்று சகோதரர்கள் உள்ளனர்.

இதில் பாலமுருகன் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Ops

Also Read : அமித்ஷாவை காணவில்லை போலீசில் புகார் !!

 

இதையடுத்து சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவு வீடு திரும்பிய பாலமுருகன் இன்று காலை காலமானார். பாலமுருகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து பெரியகுளம் விரைந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலமுருகன் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மேல்சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டரில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை – அமெரிக்கா !!


Star Tamil News | OPS

Leave a Reply

%d bloggers like this: