[ Ooty ] முககவசம் அணியவில்லை என்றால் 6 மாதம் சிறை !!

               [ Ooty ]                  முககவசம் அணியவில்லை என்றால் 6 மாதம் சிறை உதகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உதகை மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உதகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

தமிழகத்தில் கொரானா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நோய் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது இதனால் பல மாவட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன .

இந்நிலையில் உதகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் போன்ற காரணங்களால் கொரானா  2ஆம் அலை ஏற்பட்டால் அதை கட்டுப் படுத்தும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Ooty

( Ooty ) உதகை ஆட்சியர் உத்தரவு

இதனால் உதகை வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் இல்லை எனில் 6மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் முககவசம் அணியாதவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: