போலி Fast Tag விற்பனை மத்திய அரசு எச்சரிக்கை

போலி Fast Tag விற்பனை மத்திய அரசு எச்சரிக்கை

Star Tamil News

சுங்கச்சாவடியில் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக 2016 ஆம் ஆண்டு Fast Tag என்னும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் பாஸ்ட் டேக் இருக்க வேண்டும் என்கிற முறையை இந்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை  அமல்படுத்தியது காலக்கெடுவை நீடிக்க கோரிய பொது மக்களின்  கோரிக்கையை ஏற்று  காலக்கெடுவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடித்திருந்தது.

Fast-Tag

தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்ராக் முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதனால் வாகன உரிமையாளர்கள் Fast Tag அட்டையை வாங்கி உபயோகபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைனில் சிலர் போலி Fast Tag அட்டைகளை விற்பனை செய்து வருவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் NHAI வழங்கும் Fast Tag அட்டையை போலவே போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசல் Fast Tag

இதுகுறித்து NHAI விடுத்துள்ள அறிவிப்பில் பொதுமக்கள் https://ihmcl.co.in எனும் அதிகாரப்பூர்வ  இணையதளத்தையும் அல்லது My Fast Tag என்கிற செயலியை பயன்படுத்தி  Onlineல் அசல் Fast Tag  வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்லது வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  ஏஜெண்டுகளிடம் மட்டும் Fast Tag அட்டை வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் பற்றி IHMCL என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் மேலும் உதவிக்கு 1033 என்கிற பிரத்தியேக எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


Star Tamil News                                

Leave a Reply

%d bloggers like this: