[ Nitish Veera ] நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி !! – 01

[ Nitish Veera ]
நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி


கொரோனா நோய்தொற்று 2வது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்த நோய் தொற்றுக்கு திரைத்துறையினர் பலர் பலியாகி வருகின்றனர்.

கே.வி.ஆனந்த் [மாரடைப்பு & கொரோனா] , நடிகர் பாண்டு, மாறன், பாடகர் கோமகன் உள்ளிட்டோரை தொடர்ந்து குணச்சித்ர நடிகரான நிதிஷ் வீரா இன்று கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Nitish-veera

வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிதிஷ் வீரா. விஜய் சேதுபதி உடன் இணைந்து லாபம் என்னும் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நிதிஷ் வீரா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 6.15 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் நிதிஷின் கொரோனா மரணமும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Also Read : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !!


Star Tamil News |  Nitish Veera

Leave a Reply

%d bloggers like this: