[ Nithyananda ] திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை சங்கடப்படுத்திய நித்யானந்தா !! -05

[ Nithyananda ]

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை சங்கடப்படுத்திய நித்யானந்தா


திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா பெங்களூர் புறநகர் பகுதியான பிடதியை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமம் அமைத்து தனது பேச்சாற்றல் மூலம் எண்ணற்ற மக்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் இந்தியா உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நித்யானந்தாவை காணவரும் பக்தர்கள் அவரின் பேச்சில் மயங்கி தங்களது மொத்த சொத்துக்களை நித்தியானந்தாவின் பாதங்களில் சமர்ப்பிக்கும் அளவிற்கு அவரின் அசுர வளர்ச்சி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த வீடியோ பிரபல தொலைக்காட்சி மூலம் வெளியான பின்னர் நித்யானந்தாவின் சறுக்கல்கள் தொடங்கின.

தன்னைத்தானே கடவுள் என கூறிக்கொள்ளும் நித்தியானந்தா பாலியல் வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி இந்திய நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் கைலாசா என்கிற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்திருந்தார். அவ்வப்போது கைலாச நாட்டின் பாஸ்போர்ட் , கொடி , கைலாச நாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு இலவச விமான டிக்கெட் என கட்டு கதைகளை அள்ளி வீசி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

Nithyananda-நித்யானந்தா

தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையான் போல காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மேலும் அந்த பதிவில் தன்னை வணங்கினால் பண கஷ்டங்கள் நீங்கி செல்வங்கள் பெருகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Nithyananda-நித்யானந்தா

Nithyananda

ஏற்கனவே சிவன் வேடத்தில் தோன்றி தன்னைத்தானே சிவனின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருந்த நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையான் வேடமிட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைணவ மற்றும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பக்தர் ஒருவர் இந்திய அரசு நித்தியானந்தாவை விரைவில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் எனவும் மேலும் சில அச்சில் ஏற்ற முடியாத அளவு சில வார்த்தைகளை கூறியதிலிருந்து பக்தர்கள் மனதை நித்தியானந்தா எந்தளவுக்கு காயப்படுத்தியுள்ளார் என உணரமுடிகிறது.

 


Star Tamil News                                     Nithyananda

Leave a Reply

%d bloggers like this: