[ New Zealand ] இந்தியவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்தில் நுழைய தடை !! -02

[ New Zealand ]

நியூசிலாந்தில் நுழைய இந்திய பயணிகளுக்கு தடை


இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது இதனால் இந்தியாவிலிருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் வேகம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் இந்தியாவில் 126786 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 56900 பேருக்கு நேற்று ஒரே நாளில் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

New-Zealand

இந்நிலையில் இந்தியாவில் இருந்து நியூஸிலாந்து வரும் பயணிகள் பலருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நியூசிலாந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல்-11 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


Star Tamil News                     New Zealand

Leave a Reply

%d bloggers like this: