[ Vaccine ] தடுப்பூசியால் ஆண்மைக்குறைவு ஏற்படுமோ என அஞ்சும் கிராம மக்கள் !! -01

[ Vaccine ]

தடுப்பூசியால் ஆண்மைக்குறைவு ஏற்படுமோ என அஞ்சும் கிராம மக்கள்


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 9ம் தேதி நிலவரப்படி நாசிக் நகரில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3.56 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3865 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுபடுத்தும் தடுப்பூசியை அனைவரும் செலுத்திகொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் உயிருக்கு உத்ரவாதம் என அரசு கூறி வருகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி பற்றிய அச்சமும் வதந்திகளும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நிலவி வரத்தான் செய்கிறது.

Vaccine

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில உணவுத்துறை அமைச்சர் சகன் புஜ்பால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நாசிக் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக எழுந்த வதந்திகளை நம்பி அதை எடுத்துக்கொள்ள அஞ்சுகின்றனர்.

அதேவேளையில் தற்போது கிராமப்புறங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே வதந்திகளை நம்பாமல் அச்சத்தை புறந்தள்ளிவிட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என கூறினார்.

Also Read : சித்தப்பாவை கடத்தி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது !!


Star Tamil News |  Vaccine 

Leave a Reply

%d bloggers like this: